அப்பேய்நிலை கண்ட யோகினி இயல்பு கூறியது 172. | முறம்பல போலந கங்கண்மு றிந்து | | முகஞ்சித றாமுதுகுந் திறம்பிவி லாவிற யோகினி மாதர் சிரித்துவி லாஇறவே. | (பொ-நி.) நகங்கள் முறிந்து முகம்சிதறா, முதுகுந்திறம்பி, விலாவிற, யோகினி மாதர்சிரித்து விலா இறவே; (எ-று.) (வி-ம்.) முறம்-சுளகு. சிதறா-சிதைய. முதுகு திறம்பி-முதுகு மாறி. விறல்-வலிமை. விலா-குறுக்கு எலும்பு.இற-முரிய. (20) |