இந்திரசாலம் நிறுத்தியது கூறியது

175.வணங்குதலும் கணங்களெலாம் மாயப் பாவி
       மடுத்தெம்மை மறுசூடு சுடுவை யாகில்
அணங்கரசின் ஆணைஎன வணங்கும் இப்போது
      அவைதவிர்எங் கிவைகற்றா யென்ன ஆங்கே.

     (பொ-நி.) வணங்குதலும், கணங்களெலாம் "சுடுவை யாகில்,ஆணை"
என, அணங்கும் "தவிர்" இவை எங்கு கற்றாய்; என்ன; (எ-று.)

     (வி-ம்.)  வணங்குதலும் -  முதுபேய்    வணங்குதலும்.    கணம்
-பேய்க்கூட்டம்.  மறித்து-மறுபடியும்.  சூடு-வருத்துதல். அணங்கரசு - காளி.
என-என்றுசொல்ல. அவை-இந்திரசாலம். தவிர்-விட்டுவிடு.           (23)