முதுபேய் வரலாறு கூறியது

176. நின்முனிவும் சுரகுருவின் முனிவும்அஞ்சி
        நிலையரிதென்று இமகிரிபுக் கிருந்தேற்கு ஒளவை
தன்முனிவு மவன்முனிவுந் தவிர்க என்று
      சாதனமந் திரவிச்சை பலவுந் தந்தே.

     (பொ-நி.) (முனிவும்) (முனிவும்)  அஞ்சி இமகிரி புக்கு இருந்தேற்கு
(முனிவும்) (முனிவும்) தவிர்க என்று விச்சை பலவும் தந்து; (எ-று.)

     
(வி-ம்.) முனிவு - வெகுளி.  சுரகுரு - சோழன்.  நிலை-இவ்விடத்து
நிலைபெற்றிருத்தல். ஒளவை - தாயாகிய காளி. அவன்; சுரகுரு.  சாதனம்-
கருவியாகிய வித்தை.                                        (24)