கரிகாலன் இமயத்தில் புலிக்குறி பொறித்தது கூறியது      

178.செண்டு கொண்டுகரி காலனொரு காலின் இமயச்
       சிமய மால்வரைதி ரித்தருளிமீள அதனைப்
பண்டு நின்றபடி நிற்கஇது வென்று முதுகில்
     பாய்பு லிக்குறிபொறித்து அதும றித்தபொழுதே.    

     (பொ-நி.)  கரிகாலன், வரைதிரித்தருளி, நிற்க இது என்று புலிக்குறி பொறித்து, அது மறித்தபொழுது; (எ-று.)

    (வி-ம்.) செண்டு; ஒரு போர்க்கருவி. ஒருகால் -ஒருசமயம்,  சிமயம்-
குவடு.  திரித்து - கீழும்  மேலுமாகத்  திருப்பி, திரித்தல்-நிலை  பெறுதல்.
முதுகில்-நடுவிடத்தில். பொறித்து-எழுதி. அது: இமயம்.  மறித்த -முன்போல்
நிலைநிறுத்திய.                                               (1)