நாரதர், கரிகாலனை அணுகி மொழிந்தது கூறியது

179. கால மும்மையுமு ணர்ந்தருளு நார தனெனும்
       கடவுள் வேதமுனி வந்துகடல் சூழ்பு வியில்நின்
போலு மன்னருள ரல்லர் என வாசி புகலாப்
புகல்வ தொன்றுளது கேளரச என்று புகல்வான
 
     (பொ-நி.)வேதமுனி  வந்து  ஆசி புகலா ‘அரச, புகல்வது; உளது
கேள்' என்று புகல்வான்; (எ-று.)

     (வி-ம்.) காலம் மும்மை - இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்னும் மூன்று
காலமும். ஆசி-வாழ்த்துரை; நல்லுரை. புகலா-புகன்று.               (2)