இதுவும் அது 180. | பண்டு பாரதமெ னுங்கதைப ராச ரன்மகன் | | கர வெங்கரிமு கன்பரும ருப்பை யொருகைக் கொண்டு மேருசிக ரத்தொருபு றத்தி லெழுதிக் குவல யம்பெறுத வப்பயனு ரைப்ப வரிதால். | (பொ-நி.)பராசரன் மகன் கதை பகர, கரிமுகன், மருப்பைக்கொண்டு, மேரு சிகரத்து எழுதிக், குவலயம் பெறுதவப்பயன் அரிது; (எ-று.) (வி-ம்.) பராசரன்மகன்; வியாதன். கரிமுகன்-ஆனை முகக் கடவுள். பருமருப்பு - பெரிய கொம்பு. சிகரம்-உச்சி எழுதி; எழுத எனத் திரிக்க. குவலயம்-உலகத்தார். (3) |