நாரதர், இராசபாரம்பரியம் கூறத்தொடங்கியது கூறியது   

181.பாரதத்தினுள வாகியப வித்ர கதையெம்
      பரம னற்சரிதை மெய்ப்பழைய நான்ம றைகளே
நேரதற்கு இதனை நான்மொழிய நீயெழுதி; முன்
     நெடிய குன்றின்மிசை யேயிசைவ தான கதைகேள்.

     (பொ-நி.) பவித்ர  கதை  பரமன்  நற்சரிதை (ஆகும்)அதற்கு நேர்
நான்மறைகளே. கதை இதனை நான் மொழிய நீ எழுது, (எ-று.)

     (வி-ம்.) பவித்ரம் - தூயது.  பரமன் - கண்ணன். நல்சரிதை-சிறந்த
வரலாறு. நேர்-ஒப்பு. இசைவது (பாரதத்திற்கு) ஒப்பானது.            (4)