மறையின் இயல்பு கூறியது

182. அதன்மு தற்கண்வரு மாதிமுதன் மாய னிவனே
       அப்ர மேயமெனு மெய்ப்ரியம தாக வுடனே
பதமு மிப்பதம்வ குக்கவரு பாத மதுவும்
      பாத மான சில பார்புகழ வந்த வவையும்.
 
     (பொ-நி.)  மாயன்  அப்ரமேயம்  எனும் மெய், அது ப்ரியம் ஆக
உடனே. பதமும், பாதமதுவும், சில பார்புகழ வந்த அவையும்: (எ-று.)

     (வி-ம்.) அது - பாரதம்.  அப்ரமேயம் - அளவிடப்படாதது. மெய்-
உண்மைப் பொருள். அது ப்ரியம் ஆக-அப்பொருள் விரும்ப. பதம்-உலகம்.
பாதம்-பிரிவு.                                                (5)