இதுவும் அது

183.அந்த முட்படவி ருக்குமவ்வி ருக்கின் வழியே
       ஆகி வந்ததவ்வ ருக்கமும் வருக்க முழுதும்
வந்த வட்டகமும் ஒட்டரிய சங்கி தைகளும்
      வாய்மை வேதியர்க டாம்விதியெ னும்வ கையுமே.
 
     (பொ-நி.) இருக்கும்,   வருக்கமும்,   அட்டகமும்,   சங்கிதைகளும்,
வகையும்; (எ-று.)

     (வி-ம்.) இருக்கு - வேதமந்திரம்.  வருக்கம்:  சில இருக்கு சேர்ந்தது.
அட்டகம் - சில  அத்தியாயங்கள் சேர்ந்தது. ஒட்டு, தொடர்புற்ற சங்கிதை;
எட்டு அட்டகம் சேர்ந்தது. விதி, ஒழுக்கமுறை.                    (6)