திருமாலே அபயனாவனென்பது கூறியது 184. | கமல யோனிமுத லாகவருமுங்கண் மரபிற் | | காவன் மன்னவர்க ளாகிவரு கின்ற முறையால் அமல வேதமிது காணும்இதி லார ணநிலத்து அமல னேயபய னாகஅறி கென்ற ருளியே. |
(பொ-நி.) உங்கள் மரபில், மன்னவர்கள், கமலயோனி முதலாக வருகின்ற முறையால், இது வேதம்,அமலனே அபயனாக அறிக என்றருளி; (எ-று.) (வி-ம்.) கமலயோனி -பிரமன். அமலன்-திருமால். (7) |