திருமால், நான்முகன், மரீசி, காசிபன், ஞாயிறு
வழிமுறை கூறியது

186.ஆதி மால்அமல நாபிகம லத்து அயனுதித்து
      அயன்ம ரீசியெனு மண்ணலைய ளித்த பரிசும்
காதல் கூர்தரும ரீசிமக னாகி வளரும்
     காசி பன்கதிர் அருக்கனைய ளித்த பரிசும்

     (பொ-நி.)   திருமாலின்    உந்திக்    கமலத்தில்    நான்முகன்
தோன்றினான்,   நான்முகன்   மரீசியைப்   பெற்றான். மரீசி காசிபனைப்
பெற்றான். காசிபன் கதிரவனை(சூரியனை)ப் பெற்றான். (எ-று.)

     (வி-ம்.) மால்-திருமால். நாபி-உந்தி (கொப்பூழ்.) அயன்-நான்முகன்.
அருக்கன்-கதிரவன்.                                         (9)