மனு, இக்குவாகு சிறப்புக் கூறியது 187. | அவ்வ ருக்கன்மக னாகிமனு மேதி னிபுரந்து | | அரிய காதலனை ஆவினது கன்று நிகரென்று எவ்வ ருக்கமும்வி யப்பமுறை செய்த பரிசும், இக்கு வாகுஇவன் மைந்தனென வந்த பரிசும். |
(பொ-நி.) மனு அருக்கன் மகனாகிப் புரந்து முறைசெய்தகதையும், இக்குவாகு இவன் மைந்தன் என வந்த பரிசும்; (எ-று.) (வி-ம்.) அருக்கன் - ஞாயிறு. மனு -மனுச்சோழன். மேதினி-உலகம். காதலன்-புதல்வன். வருக்கம்-மக்கட்கூட்டம். பரிசு-தன்மை. (10) |