மாந்தாதா, முசுகுந்தன் சிறப்புக் கூறியது

189.ஒருது றைப்புனல்சி னப்புலியும் மானுமுடனே
       உண்ண வைத்தவுர வோனுலகில் வைத்த அருளும்
பொருது றைத்தலைபு குந்துமுசு குந்தன் இமையோர்
     புரம டங்கலும ரண்செய்துபு ரந்த புகழும்.
 
 
      (பொ-நி.) புலியும் மானும் புனல் உண்ணவைத்த உரவோன் வைத்த
அருளும் ; முசுகுந்தன்; புகுந்து, புரந்த புகழும்; (எ-று.)

     
(வி-ம்.) புனல் -  நீர்.  உரவோன் - மாந்தாதா. பொருதுறைத்தலை-
போர்க்களம். இமையோர்புரம்- தேவலோகம். அடங்கலும் -முழுதும். அரண்-
காவல். புரத்தல்-பாதுகாத்தல்.                                    (12)