வாழ்த்து 19. | விதிமறை யவர்தொழில் விளைகவே | | விளைதலின் முகில்மழை பொழிகவே நிதிதரு பயிர்வளம் நிறைகவே நிறைதலின் உயிர்நிலை பெறுகவே. | 20. | தலமுதல் உளமனு வளர்கவே | | சயதரன் உயர்புலி வளர்கவே நிலவுமிழ் கவிகையும் வளர்கவே நிதிபொழி கவிகையும் வளர்கவே. | (பொ-நி.) மனுவளர்க; புலி வளர்க; கவிகையும் வளர்க; (அதனால்) மறையவர் தொழில் விளைக; மழை பொழிக; வளம் நிறைக; உயிர ்நிலைபெறுக (எ-று) (வி-ம்.) மறையவர் தொழில் - வேள்வி. முகில் - மேகம். நிதிதரு - செல்வத்தைத் தரும். நிலைபெறுக - நிலைபெற்று வாழ்க. தலம் முதல் உள - உலக நிலைபேற்றிற்குக் காரணமாக உள்ள. மனு-குலோத்துங்கன். சயதரன் - குலோத்துங்கன், புலி-புலிக்கொடி. நிலவு-நிலாவொளி. கவிகை- வெண்கொற்றக்குடை. நிதி-செல்வம். கவிகை-கீழ்நோக்கி இடக் கவிந்தகை. (19, 20) |
|
|