பிருதுலாட்சன், சிபிச் சிறப்புக் கூறியது

190.கடல்க லக்கவெழு மின்னமுது தன்னை யொருவன்
   கடவுள் வானவர்க ளுண்ண அருள் செய்தகதையும்
உடல்க லக்கறஅ ரிந்துதசை யிட்டும் ஒருவன்
  ஒருது லைப்புறவொடு ஒக்கநிறை புக்க புகழும்.

     (பொ-நி.)  ஒருவன்,  இன்னமுது   தன்னை,  வானவர்கள் உண்ண
அருள்செய்த கதையும்,  ஒருவன்  தசையிட்டு, நிறைபுக்க  புகழும; (எ-று.)

     (வி-ம்.) கலக்க-கடைய. வானவர்- தேவர். கலக்கு அற -மனக்கலக்கம்
அற. அரிந்து-அறுத்து. தசையிட்டு-புலாலைவைத்து, துலை-துலாத்தட்டு,புறவு-
புறா. நிறை-எடையாக.                                          (13)