சுராதிராசன், இராசகேசரி, பரகேசரி சிறப்புக் கூறியது 191. | சுராதி ராசன்முத லாகவரு சோழன் முனநாள் | | சோழ மண்டல மமைத்தபிற கேழுலகையும் இராச கேசரிபு ரந்துபர கேச ரிகளாம் இருவ ராணைபுலி யாணையென நின்ற புகழும். | (பொ-நி.) வருசோழன் சுராதிராசன் சோழமண்டலம் அமைத்தபிறகு, இருவர், புரந்து, ஆணை, புலி ஆணை என நின்ற புகழும்; (எ-று.) (வி-ம்.) சுராதிராசன் - சுராதிராசனென்பவன். ஆணை - கட்டளை . முதலாகஅமைத்து என இயைக்க. இருவர் புரந்து என இயைக்க. (அவர்கள்)ஆணை புலி ஆணை எனவே, புலிப்பொறி கொள்ளப்பட்டது குறித்தவாறாம். (14) |