கிள்ளிவளவன், கவேரன் இராசேந்திரமிருத்யுசித்து சிறப்புக் கூறியது

192. கால  னுக்கிதுவ  ழுத்கெனவு ரைத்த வவனும்
    காவி ரிப்புனல்கொ ணர்ந்தவவ னும்பு வனியின்
மேல னைத்துயிரும் வீவதிலை யாக நமன்மேல்
  வென்றி கொண்டவனு மென்றிவர்கள் கொண்டவிறலும்.

     (பொ-நி.)உரைத்த அவனும்,கொணர்ந்த அவனும் நமன்மேல் வென்றி
கொண்டவனும் என்று இவர்கள் கொண்ட விறலும்; (எ-று.)

     (வி-ம்.) காலன்-இயமன். வழக்கு-முறைமை. புவனி - உலகம், வீவது-
இறப்பது. நமன்-இயமன். வென்றி-வெற்றி. விறல்-வெற்றி.              (15)