சித்திரன், சமுத்திரசித்து பஞ்சபன் முதலியோர் சிறப்புக் கூறியது 193. | புலியெ னக்கொடியி லிந்திரனை வைத்த வவனும் | | புணரி யொன்றினிடை யொன்றுபுக விட்டவவனும் வலியி னிற்குருதி உண்கெனவ ளித்த வவனும் வாத ராசனைவ லிந்துபணி கொண்ட வவனும் | (பொ-நி.) இந்திரனை வைத்த அவனும், புகவிட்ட அவனும், அளித்த அவனும், பணிகொண்ட அவனும்; (எ-று.) (வி-ம்.) கொடியில்-தன் கொடியிடத்தில். புணரி-கடல். குருதி -செந்நீர். வாதராசன்-வாயுதேவன்; காற்றுக் கடவுள். (16) |