தூங்கெயில் எறிந்தோன், உபரிசரன் முதலியோர் சிறப்புக் கூறியது | 194. | தூங்கு மூன்றெயி லெறிந்தவவ னுந்தி ரண்மணிச் | | | சுடர்வி மானமது வான்மிசையு யர்த்த வவனும் தாங்கள் பாரதமு டிப்பளவுநின்று தருமன் தன்க டற்படைத னக்குதவி செய்த வவனும். | (பொ-நி.) தூங்கெயில் எறிந்த அவனும்,விமானமது உயர்த்த அவனும், உதவிசெய்த அவனும். (எ-று.) (வி-ம்.) தூங்கு - அசைந்து செல்கின்ற. திரள் மணி - கூட்டமாகிய ஒளிமணிக்கற்கள். சுடர் விமானம்-ஒளியுள்ள விமானம். வான்-வானம்.எயில் - மதில். எறிதல்-அழித்தல். (17) |