கிள்ளிவளவன், செங்கணான் சிறப்புக் கூறியது

195. தளவ ழிக்குநகை வேல்விழிபி லத்தின் வழியே
   தனிந டந்துரகர் தங்கண்மணி கொண்ட வவனும்
களவ ழிக்கவிதை பொய்கையுரை செய்ய உதியன்
  கால்வ ழித்தளையை வெட்டியர சிட்ட வவனும்.

     (பொ-நி.)  உரகர்தம்    கண்மணி    கொண்ட  அவனும்; உதியன்
கால்வழித்தளையை வெட்டி அரசிட்ட அவனும்; (எ-று.)

     (வி-ம்.) தளவு - முல்லை. நகை - முறுவல்.  பிலம் -குகை உரகர்தம்
கண்மணி-நாககன்னிகை. களவழி-களவழி  நாற்பது என்னும் நூல். பொய்கை-
பொய்கையாரென்னும் புலவர். உதியன்-சேரமான்  கணைக்கால் இரும்பொறை,
தளை-விலங்கு. இட்ட-வைத்த. அவன்: செங்கணான்.                  (18)