கரிகாலன், சேரபாண்டியர்களை வென்றது கூறியது

196.என்று மற்றவர்கள் தங்கள்சரி தங்கள் பலவும்
   எழுதி மீளஇதன் மேல்வழுதி சேரன் மடியத்
தன்த னிக்களிற ணைந்தருளி வீர மகள்தன்
  தனத டங்களொடு தன்புயம ணைந்த பரிசும்.

     (பொ-நி.)என்று சரிதங்கள் பலவும் எழுதி, மீள, இதன் மேல், வழுதி,
சேரன் மடிய, களிறணைந்தருளி, அணைந்த பரிசும:் (எ-று.)

     (வி-ம்.)  இது:  இமயம்.  வழுதி -பாண்டியன். தனிக்களிறு -ஒப்பற்ற
ஆண்யானை. அணைந்து- மேற்கொண்டு.வீரமகள் - வெற்றி மங்கை. தனம்-
கொங்கை.                                                   (19)