கரிகாலன், பிரதாபருத்திரன் கண்கொண்டது கூறியது

197 தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
   தொடர வந்திலா முகரி யைப்படத்து
எழுது கென்றுகண் டிதுமி கைக்கணென்று
  இங்க ழிக்கவே அங்க ழிந்ததும்,

     (பொ-நி.) பொன்னியில்,  வந்திலா  முகரியை, எழுதுகென்று, கண்டு,
இங்கு அழிக்கவே அங்கு அழிந்ததும்; (எ-று.)

     (வி-ம்.) பொன்னி-காவிரி. முகரி - வீண்    ஆரவார  முடையோன்;
பிரதாபருத்திரன். படத்து - படத்தினிடத்து. மிகை-வேண்டாதது. இங்கு
அழிக்க-இவ்விடத்துச் சிதைக்க.                                  (20)