கரிகாலன், பட்டினப்பாலை கொண்டது கூறியது      

198தத்து நீர்வரால் குருமி வென்றதுந்
   தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப்
  பண்டு பட்டினப் பாலை கொண்டதும்,

     (பொ-நி.) குருமி வென்றதும். பரிசில்வாணர், பத்தோடாறு நூறாயிரம்
பெறப் பட்டினப்பாலை கொண்டதும்; (எ-று.)

     (வி-ம்.) வரால்-மீன்வகை. தத்து - தாவி யோடுகின்ற. பரிசில்வாணர்-உருத்திரங் கண்ணனார். பத்தொடு  ஆறு  நூறாயிரம் - பதினாறு  இலக்கம்.
பட்டினப்பாலை:  பத்துப் பாட்டுள் ஒன்று. குருமி: குருமியென்னும் ஒரு நகர்;
கடப்பை மாவட்டத்துள்ளது.                                     (21)