கரிகாலன், சேர பாண்டியரை மானக்கேடு செய்தது கூறியது     

199. ஒருவர் முன்னோர்நாள் தந்து பின்செலா
   உதியர் மன்னரே மதுரை மன்னரென்று
இருவர் தம்மையும் கிழிகள் சுற்று வித்து
  எரிவி விளக்குவைத்து இகல்வி ளைத்ததும்.

     (பொ-நி.) ஒருவர்  முன்பின்  தந்து  செலா இருவர் தம்மையும்,கிழி
சுற்றுவித்து, விளக்குவைத்து இகல் விளைத்ததும்: (எ-று.)

     (வி-ம்.) ஒருவர்: பகைவர். ஓர்நாள்- ஒருநாளும். பின் தந்து  செலா-
புறக்கொடை கொடாத. உதியர்: சேரர். கிழி-தந்தை. எரி  விளக்கு- எரிகின்ற
விளக்கு.  வைத்து  -  தலையில்  வைத்து.  இகல்  - வலிமை. விளைத்தது-
தோற்றுவித்தது.                                               (22)