பராந்தகன் சிறப்புக் கூறியது

200வேழ மொன்றுகைத்து ஆலி விண்ணின்வாய்
   விசைய டங்கவும் அசைய வென்றதும்
ஈழ முந்தமிழ்க் கூட லுஞ்சிதைந்து
  இகல் கடந்தோர் இசை பரந்ததும்,

      (பொ-நி.) விண்ணின்வாய்   வேழம்   உகைத்து, அசையவென்றதும்,
சிதைத்து, கடந்ததோர் இசை பரந்ததும்; (எ-று.)

      (வி-ம்.) வேழம்-யானை. ஆலி- மழைத்துளி. விசை -பகைவர் எழுச்சி.
அடங்க-குறைய; முழுதும். அசைய-கெட. ஈழம்-இலங்கை. சிதைத்து -அழித்து.
கூடல்-மதுரை. இகல்-பகை. ஓர் இசை-ஒப்பற்ற புகழ்.                 (23)