இராசராசசோழன் சிறப்புக் கூறியது      

201.சதய நாள்விழா உதியர் மண்டலம்
   தன்னில் வைத்தவன் தனியொர் மாவின்மேல்
உதய பானுவொத்து உதகை வென்றகோன்
  ஒருகை வாரணம் பலக வர்ந்ததும்,

     (பொ-நி.)  சதயநாள்  விழா  வைத்தவன்,   உதகை  வென்றகோன்,
வாரணம் பல கவர்ந்ததும்; (எ-று.)

      (வி-ம்.) உதியர் மண்டலம் - சேரர் நாடு. மா - யானை.உதயபானு-
எழுகின்ற ஞாயிறு. உதகை: ஓர் ஊர். வாரணம்-யானை.              (24)