இராசேந்திர சோழன் சிறப்புக் கூறியது

202.களிறு கங்கைநீ ருண்ண மண்ணையில்
   காய்சி னத்தொடே கலவு செம்பியன்
குளிறு தெண்டிரைக் குரைக டாரமும்
  கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும்,

     (பொ-நி.) செம்பியன்   மண்ணையில்  களிறு   உண்ண,  கடாரமும்
கொண்டு குடையுள் மண்டலம் வைத்ததும்; (எ-று.)

      (வி-ம்.)  மண்ணை;  ஓர்  ஊர்.  கலவு - பொருந்திய. செம்பியன் -
இராசேந்திரசோழன். குளிறு-ஒலிக்கின்ற.திரை- அலைகளையுடைய.    குரை  
கடாரம் - பல்வகை  ஒலிகளையுடைய கடாரம்.அலை- ஒலி செய்கின்ற.
மண்டலம் - உலகம். குடையுள்வைத்தல்- தன் வெண்கொற்றக் குடையின்
கீழ் அடக்கியதும்.                                      (25)