இராசாதிராசன் சிறப்புக் கூறியது 203. | கம்பி லிச்சயத் தம்ப நட்டதும் | | கடிய ரண்கொள்கல் யாணர் கட்டறக் கிம்பு ரிப்பணைக் கிரியு கைத்தவன் கிரிக ளெட்டினும் புலிபொ றித்ததும் | (பொ-நி.) கிரி உகைத்தவன், சயத்தம்பம் நட்டதும்,கல்யாணர் கட்டற; புலி பொறித்ததும்; (எ-று.) (வி-ம்.) கம்பிலி; ஒரு நகரம். சயத்தம்பம்-வெற்றித்தூண். கடி அரண் - காவலையுடைய மதில்கள். கல்யாணர்-சளுக்கியர். கட்டற-நிலைகுலைய. கிம்புரி- யானைத் தந்தத்தில் அணியும் பூண். பணை-யானை கட்டுமிடம். கிரி - யானை. (26) |