இராசேந்திரதேவன் சிறப்புக் கூறியது 204. | ஒருக ளிற்றின்மேல் வருக ளிற்றையொத்து | | உலகு யக்கொளப் பொருது கொப்பையிற் பொருக ளத்திலே முடிக வித்தவன் புவிக விப்பதோர் குடைக வித்ததும். | (பொ-நி.) களிற்றை ஒத்து, கொப்பையிற் பொருது, முடிகவித்தவன் குடைகவித்ததும்; (எ-று.) (வி-ம்.) வருகளிறு-(ஏறி) வருகின்ற யானை. உயக்கொள-பிழைத்தலைப் பெறுமாறு. கொப்பை; ஓர் ஊர். பொருது-போர்செய்து. புவி- உலகம். கவித்தது தன் முடிமீதென்க. (27) |