முதற்குலோத்துங்கன் தோற்றம் கூறியது 206. | குந்தளரைக் கூடற்சங் கமத்துவென்ற | | கோனபயன் குவலயங்காத் தளித்த பின்னை இந்தநிலக் குலப்பாவை இவன்பாற் சேர என்ன தவஞ் செய்திருந்தாள் என்னத் தோன்றி. | (பொ-நி.) அபயன் அளித்த பின்னை பாவை சேர என்ன தவம் செய்திருந்தாள் என்னத் தோன்றி; (எ-று.) (வி-ம்.) குந்தளர்-குந்தளநாட்டு வீரர். கூடல் சங்கமம்-கூடற் சங்கமமென்னும் இடம். கோன்-அரசன். குவலயம்-உலகம். குலம்-மேன்மை. தோன்றி-பிறந்து. (29) |