குலோத்துங்கன் வெற்றிச் சிறப்புக் கூறியது 207. | எவ்வளவு திரிபுவன முளவாய்த் தோன்றும் | | எவ்வளவு குலமறைக ளுளவாய் நிற்கும் அவ்வளவு திகிரிவரை யளவுஞ் செங்கோல் ஆணைசெல்ல வபயன் காத் தளிக்கு மாறும். | (பொ-நி.) எவ்வளவு புவனம் தோன்றும், எவ்வளவு மறைகள் நிற்கும், அவ்வளவு திகிரிவரை அளவும், ஆணைசெல்ல அளிக்கும் ஆறும்; (எ-று.) (வி-ம்.) திரிபுவனம்-மூன்று உலகம். மறை-வேதம். வேத நெறிப்பட்ட நாடு முழுவதும் என்க. திகிரிவரை-சக்கரவாளமலை. ஆணை -கட்டளை. (30) |