கரிகாலன் இமயத்தில் எழுதி முடித்தது கூறியது 208. | இப்பு றத்திமய மால்வரையின் மார்பி னகலத்து | | எழுதி னானெழுது தற்கரிய வேத மெழுதி ஒப்பு றத்தனது தொன்மரபு மம்ம ரபின்மேல் உரைசெய் பல்புகழுமொன் றுமொழி யாதபரிசே. | (பொ-நி.) மரபும், புகழும், ஒன்றும் ஒழியாத பரிசுவரையின் மார்பின் அகலத்து, வேதம் எழுதி ஒப்புற, எழுதினான்; (எ-று.) (வி-ம்.) இப்புறம்-தென்புறம். மார்பு-நடுஇடம். அகலம் - பரந்த இடம், எழுதி ஒப்புற-எழுதினால் ஒப்ப, பரிசு-தன்மை. (31) |