உறுப்புநலங் கூறி விளித்தது

21. சூதளவு அளவெனும் இளமுலைத்
     துடியளவு அளவெனும் நுண்ணிடைக்
காதளவு அளவெனும் மதர்விழிக்
   கடலமு தனையவர் திறமினோ.
    
     (பொ-நி)    இளமுலை,     நுண்ணிடை,     மதர்விழி (உடைய)
அமுதனையவர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) சூது-சூதாடு  கருவி. துடி- உடுக்கை. இடை-இடுப்பு.காதை
அளாவும் அளவு எனும் மதர்விழி என்க.  கடல் அமுது-திருப்பாற்கடலில்
தோன்றிய  அமிழ்தம்.   இதனை  'அலையிடைப் பிறவா அமிழ்து'  என
இளங்கோவடிகள்  பாராட்டுதல்  அறிக. மதர்-செருக்கு. விழி-கண்.முலை,
இடை,    விழிச்   சிறப்புக்கூறியவாறு.  விழி  காதுவரை  நீண்டிருப்பது
நல்லிலக்கணம்.    "காதளவோடிய    கலகபாதகக்   கண்"    என்றார்
பட்டினத்தடிகளும்.