காளி குலோத்துங்கனைப் புகழ்தல்      

211 உலகையெலாங் கவிக்கின்ற ஒருகவிகைச்
     சயதுங்கன் மரபு கீர்த்தி
அலகையெலாங் காக்கின்ற அம்மைபூ
   தலங்காப்பான் அவனே யென்ன.

     (பொ-நி.)  அம்மை,  “சயதுங்கன் மரபு  கீர்த்தி (வாய்ந்தது.) பூதலம்
காப்பான் அவனே" என்ன; (எ-று.)

     (வி-ம்.) கவித்தல்-மேல் நின்று நிழற்றல்.  கவிகை-குடை. சயதுங்கன்-
குலோத்துங்கன், மரபு  கீர்த்தி-பரம்பரையோர் புகழ். அலகை-பேய். அம்மை-
காளி. பூதலம்-உலகம். இவன்: குலோத்துங்கன்.                      (34)