பேய்கள் காளியிடம் தம் மிகுபசி மொழிந்தது கூறியது 212. | ஆறுடைய திருமுடியா னருளுடைய | | பெருந்தேவி அபயன் காக்கும் பேறுடைய பூதமாப் பிறவாமல் பேய்களாப் பிறந்து கெட்டேம். | (பொ-நி.) "தேவி ! அபயன் காக்கும் பூதமாப் பிறவாமல் பேய்களகப் பிறந்து கெட்டோம்," (எ-று.) (வி-ம்.) ஆறு-கங்கை. முடியான்-சிவன். அருள் உடைய - திருவருள் கொண்ட. பூதங்களுக்குப் பலியிடல் அரசர் வழக்கம். (1) |