இதுவும் அது      

213.ஆர்காப்பா ரெங்களைநீ யறிந்தருளிக்
   காப்பதல்லால் அடையப் பாழாம்
ஊர்காக்க மதில்வேண்டா உயிர்காத்த
  உடம்பினைவிட் டோடிப் போதும்.

     (பொ-நி.) நீ காப்பதல்லால் ஆர் காப்பார்; பாழ்ஆம் ஊர்காக்க மதில்
வேண்டா; உடம்பினை விட்டு ஓடிப்போதும், (எ-று.)

     (வி-ம்.) அடைய-முழுவதும். ஓடிப்போதும்-இறப்போம்.