இதுவும் அது      

214.ஓய்கின்றேம் ஓய்வுக்கு மினியாற்றேம்
   ஒருநாளைக் கொருநாள் நாங்கள்
தேய்கின்ற படிதேய்ந்து மிடுக்கற்றேம்
  செற்றாலும் உய்ய மாட்டோம்.

     (பொ-நி.)  ஓய்கின்றேம்;   ஆற்றேம்;    தேய்ந்து    மிடுக்கற்றேம்
;உய்யமாட்டோம்; (எ-று.)

     (வி-ம்.)ஓய்தல்-தளர்ச்சியடைதல். ஆற்றேம்-தாங்கமாட்டோம்;தேய்ந்து-
மெலிந்து. மிடுக்கு-எழுச்சி. செறுதல்-சினத்தல். உய்ய-பிழைக்க.           (3)