இதுவும் அது      

215.வேகைக்கு விறகானேம் மெலியா நின்றேம்
   மெலிந்தவுடல் தடிப்பதற்கு விரகும் காணேம்
சாகைக்கித் தனையாசை போதும் பாழிற்
  சாக்காடும் அரிதாகத் தந்து வைத்தாய்.

     (பொ-நி.) விறகானேம்; மெலியா நின்றேம்; உடல் தடிப்பதற்கு விரகும்
காணேம்; சாகைக்கு இத்தனை ஆசை; சாக்காடும் அரிதாகத் தந்து  வைத்தாய்;
(எ-று.)

     (வி-ம்.) வேகைக்கு-எரிவதற்கு. தடிப்பதற்கு-பருப்பதற்கு.விரகு-ஒருவழி;
உபாயம். சாகைக்கு-இறப்பதற்கு. பாழ்-வீண். சாக்காடு-இறப்பு.            (4)