இதுவும் அது

217.பதடிகளாய்க் காற்றடிப்ப நிலைநி லாமற்
   பறக்கின்றேம் பசிக்கலைந்து பாதி நாக்கும்
உதடுகளிற் பாதியுந்தின் றொறுவா யானேம்
  உனக்கடிமை யடியேமை யோடப் பாராய்.

     (பொ-நி.) காற்றடிப்ப,  பறக்கின்றோம் ; பசிக்கு  அலைந்து  தின்று
ஒறுவாய் ஆனேம்;அடியேமை ஓடப்பாராய் ;(எ-று.)

     
(வி-ம்.) பதடி - பதர். நிலை நில்லாமல்- நிலை பெறாமல் பாதிநாக்கு-
நாவில் பாதி. ஒறுவாய்-மூளியான வாய். அடிமையாகிய  அடியேம் (அடிமைத்
தொழில்   செய்வோராய்  அடிக்கண்  சூழ்ந்து   நிற்போம்)  என்க.  ஓட -
ஓடும்படி.பாராய்-பார்க்கமாட்டாய்.                                  (6)