இதுவும் அது     

218.அகளங்கன் நமக்கிரங்கான் அரசரிடுந்
   திறைக்கருள்வான் அவன்றன் யானை
நிகளம்பூண் டனவடியேம் நெடும்பசியான்
  அறவுலர்ந்து நெற்றாய் அற்றேம்.

     (பொ-நி.) அகளங்கன்   இரங்கான்;  திறைக்கு  அருள்வான்  அவன்
யானை  நிகளம்பூண்டன.  அடியேம்  உலர்ந்து  நெற்றாய்  அற்றேம்; (எ-று.)

     (வி-ம்.) அகளங்கன் - குலோத்துங்கன். திறை -கப்பம். நிகளம்-யானை
கட்டும் சங்கிலி. அற உலர்ந்து -மிகவும் வாடி.நெற்று ஆய்- முதிர்ந்து உலர்ந்த
வற்றல் போலாகி; அற்றேம்-அழிந்தேம்.                              (7)