இதுவும் அது 219. | மூக்கருகே வழுநாறி முடைநாறி | | உதடுகளுந் துடிப்ப வாயை ஈக்கதுவும் குறியாலுய்ந் திருக்கின்றேம் அன்றாகில் இன்றே சாதும் | (பொ-நி.) மூக்கருக்கே நாறி, உதடுகள் துடிப்ப, வாயை ஈகதுவும் குறியால் உய்ந்திருக்கின்றேம்; அன்றாகில் சாதும்; (எ-று.) (வி-ம்.) வழு-நிணநீர். நாறி-தோன்றி.முடை-புலால். நாறி-வீச்சமெடுத்து. கதுவுதல்.- கவ்வுதல் உய்ந்து - உயிர் பிழைத்து. இன்றே -இப்போதே. சாதும்-இறப்போம். (8) |