முலை நலங் கூறி விளித்தது

22. புடைபட இளமுலை வளர்தொறும்
     பொறைஅறி வுடையரும் நிலைதளர்ந்து
இடைபடு வதுபட அருளுவீர்
   இடுகதவு உயர்கடை திறமினோ.
    
     (பொ-நி) முலைவளர்தொறும்,   அறிவுடையரும்   நிலைதளர்ந்து,
இடைபடுவதுபட  அருளுவீர்  திறமின், (எ-று.)

     (வி-ம்.) புடைபட-பக்கம்  திரண்டு.  பொறை-துன்பம்  பொறுத்தல்,
நிலை  தளர்ந்து - தன்  இயற்கைத்  தன்மை  குன்றி.  இடை - இடுப்பு.
இடைபடுவது - துவள்வது; துன்புறுவது.  பட-பொருந்த.  உயர்கடை இடு
கதவு என இயைக்க. இடு கதவு-தாழிட்ட கதவு. கடை-வாயில். கண்டாரை
வருத்தும் இயல்பு கூறப்பட்டது.                                (2)