இதுவும் அது 222. | மதக்கரி மருப்பிற மதம்புலரு மாலோ | | மடப்பிடி மருட்பெழ மதம்பொழியு மாலோ கதிர்ச்சுடர் விளக்கொளி கறுத்தெரியு மாலோ காலமுகில் செங்குருதி காலவரு மாலோ. | (பொ-நி.) மதக்கரி மதம்புலரும்; மடப்பிடிமதம்பொழியும்; விளக்கொளி கறுத்து எரியும்; முகில் குருதி காலவரும்; (எ-று.) (வி-ம்.) கரி-(ஆண்)யானை. மருப்பு-தந்தம். புலர்தல்- வற்றுதல். பிடி- பெண்யானை. முகில்-மேகம். குருதி-செந்நீர். காலுதல்-உமிழ்தல். (11) |