இதுவும் அது

223. வார்முரசி ருந்துவறி தேஅதிரு மாலோ
    வந்திரவில் இந்திரவில் வானிலிடு மாலோ
ஊர்மனையில் ஊமனெழ ஓரியழு மாலோ
  ஓமவெரி ஈமவெரி போல்கமழு மாலோ .

     (பொ-நி.) முரசு வறிதே அதிரும்; இந்திரவில் இரவில் இடும்;மனையில்
ஊமன் எழ, ஓரி அழும்; ஓமஎரி ஈமஎரிபோல் கமழும்; (எ-று.)

     (வி-ம்.) வார்முரசு - வாரால் கட்டப்பட்ட  பேரிகை. வறிதே - வீணே.
மனை-வீடு. இந்திரவில்- வானவில். ஊமன்- பேராந்தை. ஓரி - நரி. ஓம எரி-
வேள்வி எரி. ஈமம்-சுடுகாடு. கமழும் -(தீநாற்றம்) வீசும்.                (12)