இதுவும் அது

224பூவிரியு மாலைகள்
   புலால்கமழு மாலோ
பொன்செய்மண மாலைஒளி
  போயொழியு மாலோ
ஓவியமெ லாம்உடல்
  வியர்ப்பவரு மாலோ
ஊறுபுனல் செங்குருதி
  நாறவரு மாலோ .

     (பொ-நி.) மலைகள்புலால் கமழும்; மணிமாலை ஒளி ஒழியும்; ஓவியம்
எலாம் உடல் வியர்ப்ப வரும், புனல் குருதி நாறவரும்; (எ-று.)

     (வி-ம்.) மணி-இரத்தினம். ஓவியம்-சித்திரம், புனல்-நீர். குருதி-செந்நீர்.
நாற-தோன்ற.                                                  (13)