காளி மொழிந்தது 227. | நிருபரணி வென்ற அகளங்கன்மத | | யானைநிக ளங்களொடு நிற்பன வதற்கு ஒருபரணி யுண்டெனவு ரைத்தன உரைப்படி உமக்கிது கிடைக்கு மெனவே. | (பொ.நி.) அகளங்கன் மதயானை நிற்பன (ஆகிய) அதற்கு; பரணி உண்டென உரைத்தன. இஃது உமக்குக் கிடைக்கும் என; (எ-று.) (வி-ம்.) அணி-வரிசை; (பலர் என்றபடி)அகளங்கன்- குலோத்துங்கன். நிகளம்-யானை கட்டும் காற்சங்கிலி. நிற்பன ஆகிய அதற்கு என்க. பரணி - பரணிப்போர். (14) |