பரணி உண்டெனக் கேட்ட பேய்நிலை

228.தடித்தனமெ னத்தலைத டித்தனமெனப்பல
   தனிப்பனைகு னிப்ப வெனவே
நடித்தனந டிப்பவலி யற்றனகொ டிற்றையு
  நனைத்தனஉ தட்டி னுடனே.

     (பொ-நி.) பனை  குனிப்ப  என, "தடித்தனம்" என "தடித்தனம்" என
நடித்தன; நடிப்பவலி அற்றன; கொடிற்றையு  நனைத்தன; (எ-று.)

     
(வி-ம்.) தடித்தனம்-பருத்தோம்,தலை-உடலிடம். பனை-பனைமரங்கள்.
குனித்தல்-கூத்தாடல். கொடிறு-கன்னம். நனைத்தன- வாய்நீர்  ஊறினமையால்
நனைக்கலாயின.                                               (17)