நடையழகு கூறி விளித்தது 23. | சுரிகுழல் அசைவுற அசைவுறத் | | துயிலெழும் மயிலென மயிலெனப் பரிபுர ஒலியெழ ஒலியெழப். பனிமொழி யவர்கடை திறமினோ. |
(பொ-நி) பனிமொழியவர்! குழல் அசைவுற அசைவுற, மயில் என மயில் என, ஒலி எழ ஒலி எழ திறமின்; (எ-று)
(வி-ம்.) சுரிதல்-நெளிதல். குழல்-கூந்தல். துயில்-தூக்கம். பரிபுரம்- கிண்கிணி. பனி மொழி - குளிர்ந்த (இனிய) மொழி. குழல் அசைய, பரிபுரம் ஒலிக்க, மயிலென வருபவர் என்க (3) |