காளி பேய்கட்கு மொழிந்தது

231போதும்போ தாதெனவே
   புடைப்படல மிடவேண்டா
ஓதஞ்சூ ழிலங்கைப்போர்க்கு
  ஒட்டிரட்டி கலிங்கப்போர்.

     (பொ-நி.)  புடைப்படலம்  இடவேண்டா; கலிங்கப்  போர்இலங்கைப் போர்க்கு ஒட்டிரட்டி; (எ-று.)

     (வி-ம்.) புடை - பக்கம், படலம்-கூட்டம். ஓதம் - கடல்.  ஒட்டிரட்டி-ஒன்றுக்கு இரு மடங்கு.                                        (20)