பிறந்தானென மொழிந்தமை      

232அன்றிலங்கை பொருதழித்த அவனே அப்
   பாரதப்போர் முடித்துப் பின்னை
வென்றிலங்கு கதிராழி விசயதரன்
  எனஉதித்தான் விளம்பக் கேண்மின்!

    (பொ-நி.) கேண்மின் இலங்கை பொருதழித்த அவனே போர்முடித்து,
 பின்னை. விசயதரன் என உதித்தான்; (எ-று.)

     (வி-ம்.) அவன்-இராமன்(திருமால்.) முடித்து-கண்ணனாகத் தோன்றி முடித்து என்க. ஆழி-சக்கரம் ; ஆணைச் சக்கரம். விசயதரன்-குலோத்துங்கன்.
                                                            (1)